உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி குலதெய்வ வழிபாடு

சிவராத்திரி குலதெய்வ வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்ரகாளியம்மன், கருப்பணசுவாமி கோவிலில், சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, குலதெய்வ வழிபாட்டினர் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் வாணியக்குடி, வெட்டுக்குளம், கடலூர், சித்தார்கோட்டை பேரவயல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !