சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்(31ம்தேதி) அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பக்தர்கள் திரண்டிருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் கண்காணித்தனர். மலையில் சந்தனமகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து திரும்பினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.