காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானதிற்கு ஒன்றரை டன் காய்கறி காணிக்கை
ADDED :1324 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் நித்ய அன்னதான திட்டத்திற்காக ஒன்றரை டன் காய்கறிகளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினரான மகாலட்சுமி- லக்ஷ்மிபதி ரெட்டி தம்பதியினர் காணிக்கையாக வழங்கினர்.கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் இடம் காய்கறிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னாள் புல்லட் .ஜெயசியாம்,மஹீதர் ரெட்டி, மகாலட்சுமி மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்