உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேசும் கன்னிமார் கோயிலில் சர்வ அமாவாசை சிறப்பு வழிபாடு

பேசும் கன்னிமார் கோயிலில் சர்வ அமாவாசை சிறப்பு வழிபாடு

அலங்காநல்லுரர்: மதுரை காஞ்சரம்பேட்டை பாறைபட்டி பேசும் கன்னிமார் கோயிலில் பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஏழு கன்னிமார் அம்மனுக்கும் பல்வகை மலர்களால் அர்ச்சனை, தீபாராதனை செய்து வழிபட்டனர். முன்னதாக சித்தி விநாயகர் மந்தை கருப்புசாமி கோயிலில் உலக நன்மை வேண்டி பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !