உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழா

ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று வெகுசிறப்புடன் நடந்த பூக்குழி திருவிழாவில் பல்லாயிரம் பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

இக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்தாண்டும் கடந்த மார்ச் 20 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அமாவாசை தினமான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசித்து, நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்து ரதவீதி சுற்றி வந்தனர். மதியம் 12:45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வீதியுலா துவங்கியது. அதனையடுத்து தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் கலாராணி கொடி அசைக்க, 1:10 மணிக்கு பக்தர்கள் தீ மிதிக்கத் துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தேனி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். கொரோன காரணமாக கடந்த 2 வருடமாக பூக்குழி திருவிழா வழக்கமான முறையில் நடக்காததால், நேற்று நடந்த விழாவில் வழக்கத்தை விட அதிகமாக பல்லாயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர். நகரின் பல்வேறு வீடுகளில் பொதுநல அமைப்புகள் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர். மோர். குளிர்பானங்கள் வழங்கினர். டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் 12:05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !