நயினார்கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :4862 days ago
பரமக்குடி: குழந்தை வரம், திருமணம், தோஷ நிவர்த்தி போன்ற பல்வேறு வேண்டுதலுக்காக பரமக்குடியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி முதல் ஏராளமான பக்தர்ள், நயினார்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். இக்கோயிலில் தினமும் அம்பாள் வெள்ளி பல்லக்கு, இந்திர, அன்ன, ரிஷப, சிம்ம, கமல, குதிரை வாகனங்களில் வீதியுலாவும், ஜூலை 22 காலை 8.30 மணிக்கு தேரோட்டம், 24ல் தபசு, 25ம் தேதி காலை 9 மணிக்கு நாகநாத சுவாமிக்கும், சவுந்தர்யநாயகிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல் அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி செய்துள்ளனர்.