உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் போக்கும் ‘டிசைன்’

பாவம் போக்கும் ‘டிசைன்’


உயிர்களின் புண்ணிய, பாவ கணக்குகளை பதிவேட்டில் எழுதுபவர் சித்திரகுப்தர். எமதர்மனின் உதவியாளரான இவர் சித்ரா பவுர்ணமியில் அவதரித்தார். இந்நாளில் காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து சித்திர குப்தரின் படம் அல்லது விளக்கின் முன் மலர்கள் துாவி பூஜிக்க வேண்டும். அப்போது பானகம், நீர்மோர், வெல்லம் சேர்த்த அவல் பிரசாதமாகப் படைத்து வழிபட வேண்டும். இவர் பசுவின் வயிற்றில் இருந்து அவதரித்தவர். இந்நாளில்  விரதமிருப்பவர்கள் பால், தயிர், வெண்ணெய், நெய் சேர்ப்பதில்லை. உப்பையும் தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. இதன் மூலம் ஆரோக்கியம், செல்வம், நிறைந்த புகழ் உண்டாகும். ஏழைகளுக்கு பல டிசைன்களுடன் கூடிய ஆடைகளைத் தானம் அளித்தால் பாவம் தொலையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !