திருவெண்காட்டு நடராஜர்
ADDED :1343 days ago
நாகை மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜரின் ஆபரணம் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு.
சைவ சாஸ்திரங்கள் உலகங்கள் 14 என குறிப்பிடுகின்றன. அதை குறிக்கும் வகையில் 14 சதங்கை கொண்ட காப்பு அணிந்துள்ளார். சிவ மந்திரங்கள் 81 ஐக் குறிக்கும் வகையில் 81 வளையங்கள் கொண்ட அரைஞாண் கயிறும், ஆகமங்கள் 28 குறிக்கும் வகையில் 28 எலும்புகள் கோர்த்த மாலையும், கலைகள் 16ஐ குறிக்கும் வகையில் 16 சடைகளும் கொண்டவராக நடராஜர் திருவெண்காட்டில் இருக்கிறார்.