உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலனை வென்ற சிவபெருமான்!

காலனை வென்ற சிவபெருமான்!


சிவனுக்கு காலனை வென்றதால் மிருத்யுஞ்ஜயன் என்ற திருநாமம் உண்டு. மரணத்தை வென்றவர் என்பது இதன் பொருள். மிருத்யு என்றால் மரணம். மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்தபோது, சிவபெருமான் காலனை சம்ஹாரம் செய்து மார்கண்டேயரைக் காப்பாற்றியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. காலதேவனின் கடமையைச் செய்ய சிவனே தடையாக இருந்ததாக நமக்குத் தோன்றும். ஆனால், இந்த விளையாடலில் சிவன் யமனுக்கும் அருள்புரியவே செய்தார். பார்வதியோடு அர்த்தநாரீஸ்வராக இருந்த சிவன், இடக்காலால்தான் யமனை உதைத்தார். இடபாகம் அருளே வடிவான அம்பாளின் பாகம் என்பதால், யமனின் உள்ளத்தில் தர்ம சிந்தனையே தழைத்தது. இதையடுத்து அவன் தர்மப்படி நடந்துகொண்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !