உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில் திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை

வால்பாறை கோவில் திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை

வால்பாறை: வால்பாறை, சோலையாறு எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில், கருமாரியம்மன், முனீஸ்வர சுவாமி கோவில் திருவிழா, கடந்த, 22ம் தேதி கொடியேற்றபட்டது. விழாவில், பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர். அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.விழாவில், நேற்று காலை, கருமாரியம்மன், முனீஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !