உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டுமாரியம்மன் கோவிலில் 300 விளக்குகள் ஏற்றி வழிபாடு

தண்டுமாரியம்மன் கோவிலில் 300 விளக்குகள் ஏற்றி வழிபாடு

கோவை; தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு வழிபாடு நேற்று வெகு சிறப்பாக நடந்தது.தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து பூச்சாட்டு, அக்னிசாட்டு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு சிறப்பாக நடந்தது. இதில் அம்மனுக்கு, 300 திருவிளக்குகள் ஏற்றி, பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.அதன் பிறகு, அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற்றனர். இன்று மாலை, 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !