உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,005வது அவதார உற்சவம்: தங்க பல்லக்கில் ஸ்ரீ ராமானுஜர் வீதியுலா

1,005வது அவதார உற்சவம்: தங்க பல்லக்கில் ஸ்ரீ ராமானுஜர் வீதியுலா

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீ ராமானுஜர் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழாவின் முதல் நாளில், தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீ ராமானுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ஸ்ரீ ராமனுஜரின் அவதார தலமான, ஆதிகேசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஸ்ரீ ராமானுஜரின் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ பெருவிழா நேற்று விமரிசையாக துவங்கியது.காலை 4:30 மணிக்கு, மஞ்சத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீ ராமானுஜர், தங்க மண்டப ஊஞ்சலை சென்றடைந்தார். அங்கிருந்து தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீ ராமானுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதியம் 2:00 மணிக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு மங்களகிரி வாகனத்தில் எழுந்தருளினார்.இரவு 10:30 மணிக்கு, கண்ணாடி அறையில் திருவாய்மொழி சேவையும், இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ ராமானுஜரின் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !