உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார் திருநாவுக்கரசர் ஜெயந்தி கோவிலில் சிறப்பு பூஜை

நாயன்மார் திருநாவுக்கரசர் ஜெயந்தி கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை : திருநாவுக்கரசர் ஜெயந்தி விழாவையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நாயன்மார் சன்னதியில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தமிழகத்தை சேர்ந்த, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர், பக்தி இயக்கத்தை வளர்த்ததுடன், தேவார பதிகங்களையும் பாடியுள்ளார்.சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில், இவரது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நேற்று முன்தினம், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள, நாயன்மார் சன்னதியில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநாவுக்கரசருக்கு, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !