சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED :1252 days ago
சிவகாசி: சிவகாசி ஆனையூர் சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், மாமன்னர் பூலித்தேவன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.