உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேசலாம் வாங்க...

பேசலாம் வாங்க...


பேசுவது என்பது இறைவன் கொடுத்த வரம். விலங்கு, பறவைகள் பேசுவதில்லை. மனிதனுக்கு மட்டுமே பேசும் சக்தி உண்டு. ஒருவரது வெற்றி, தோல்வி அவரது பேச்சை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. சிலரின் பேச்சு மலைக்க வைக்கும். பலரது பேச்சு சலிக்க வைக்கும்.
சிலர் என்ன பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று தெரியாமல் மணிக்கணக்காக பேசுவர். இப்படித்தான் பள்ளி விழா ஒன்றில் தலைமை ஆசிரியர் இரண்டு மணி நேரமாக பேசிக்கொண்டிருந்தார். மாணவர்களோ ‘இவர் எப்படா.. பேசி முடிப்பார்’ என்று ஆவலாக இருந்தனர். ஒருவழியாக அவர் பேசி முடித்து தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் இருவர் பேசுவதை அவர் கேட்க நேர்ந்தது.  
‘‘டேய் நண்பா.. தலைமை ஆசிரியர் பேசியது உனக்கு பிடித்ததா’’ என ஒருவன் கேட்க, ‘‘அவர் பேசிய கடைசி மூன்று வார்த்தைகள் ஜோராக இருந்தது’’ என்றான் மற்றொருவன்.
‘‘அப்படி என்ன வார்த்தை உனக்கு பிடித்தது’’ என ஆவலாக கேட்டான்.
‘‘அது ஒன்றும் இல்லை. ‘இத்துடன் பேச்சை முடித்துக்கொள்கிறேன்’ என்ற வார்த்தைகள்தான் எனது காதுகளுக்கு விருந்து அளித்தது’’ என்றான்.
இதைக்கேட்ட பிறகுதான் தலைமை ஆசிரியர் தன் தவறை உணர்ந்தார். ‘இனி யார் தன்னை பேச அழைத்தாலும், சுருக்கமாக சொல்ல வேண்டும்’ என முடிவெடுத்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !