கடவுளிடம் சொல்... என்ன வேண்டுமோ கேள்!
 
நல்வழிகாட்டுகிறார் ஆதிசங்கரர்
* கடவுளிடம் குறையை சொல். என்ன வேண்டுமோ கேள். நிச்சயம் அவர் கொடுப்பார்.   
* தவறு என தெரிந்தும் அதை செய்பவன் கண் இருந்தும் குருடனாவான். 
* தன்னலத்தை மறந்து செயல்படுவதே கடவுளை அடையும் வழி.
* புலன்களை கட்டுப்படுத்து. மனம் உன் பேச்சை கேட்கும்.  
* நெருப்பில்லாமல் சமையல் இல்லை. ஞானம் இல்லாமல் மோட்சம் இல்லை.
* உனக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழு. 
* பயன்தராத வார்த்தைகளை பேசாதே. 
* தனிமையில் இருக்கும்போதுதான் நீ யார் என்பது உனக்கே புரியவரும். 
* பிறர் உன்னை வாழ்த்தினாலும், தாழ்த்தினாலும் கண்டுகொள்ளாதே. 
* விருந்தினரை போலவே வறுமையும், செல்வமும் தற்காலிகமானது.
* ‘மூச்சுள்ள வரை உன்னை நினைக்க வேண்டும்’ என்று கடவுளிடம் கேளு. 
* தீய எண்ணத்தை அகற்ற நல்லோரின் உதவியை நாடு. 
* எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனே உயர்ந்த மனிதன்.
* உழைப்பால் சிறிய தொகை கிடைத்தாலும் அது மதிப்புமிக்கது.