மனம் ஒரு மந்திரச்சாவி
மனம் திறக்கிறார் சிவானந்தர்
* மனம் ஒரு மந்திரச்சாவி. அதை பயன்படுத்துவதை பொறுத்து உன் எதிர்காலம் அமையும்.
* செல்வமும், அந்தஸ்தும் ஒருபோதும் சந்தோஷத்தை தராது.
* குற்றமுள்ள மனம்தான் ஒருவரை எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும்.
* நேர்மையற்ற வழியில் வரும் வெற்றியை விட நேர்மையான வழியில் வரும் தோல்வி சிறந்தது.
* உன் வருவாய்க்குள் குடும்பத்தை நடத்த பழகு.
* ஆசை இல்லாதவனே உலகின் மிகப் பெரிய பணக்காரன்.
* குழந்தைகளைப்போல் திறந்த மனதுடன் எளிமையாக வாழு.
* கடவுள்தான் உண்மை. உண்மைதான் கடவுள்.
* உலகம் கண்ணாடியைப் போன்றது. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும்.
* சென்றதை மறந்துவிடு. வாழ்க்கையை புதிதாக தொடங்கு.
* குடும்பத்தினருக்கு உதவினால் அது கடவுளுக்கே செய்ததுபோலாகும்.
* நல்ல எண்ணங்களினால் உன் மனதை நிரப்பு.
* தர்மபாதையில் நடந்தால் அதுவே உனக்கு அரணாக நிற்கும்.
* அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உள்ளது.