முருகன் கோவில் குளத்தைச் சரவணப்பொய்கை என்று அழைப்பது ஏன்?
ADDED :1327 days ago
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட ஆறு நெருப்புபொறிகளும் இமயமலையில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தது. அங்குஇருந்த தாமரைகளில் படிந்து ஆறு குழந்தைகளாக மாறியது. இந்த பொய்கையை நினைவூட்டும் விதத்தில், எல்லா முருகன் கோவில்களில் உள்ள குளத்தையும் சரவணப்பொய்கை என்றனர். இதனை சாதாரண நீராகக் கருதாமல் புனித தீர்த்தமாக கருதுவது அவசியம்.