பெண்கள் வேதம் பயில்வது சரியா... விளக்கம் தேவை.
ADDED :4828 days ago
வேதம் படிக்கும் மாணவர்களுக்கு ஏழு வயதில் உபநயனம் (பூணூல் போடுதல்) செய்வித்து காயத்ரி மந்திரம் உபதேசம் செய்வர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்தும், காயத்ரி ஜபம் செய்தும் குருகுலவாசமாக இருந்து வேதம் பயில வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வேதம் பயில காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். காயத்ரி ஜபம் செய்ய உபநயனம் ஆகியிருக்க வேண்டும். பெண்களுக்கு பூணூல் போடச் சொல்லி சாஸ்திரங்கள் சொல்லவில்லை. அவ்வளவு தான். இதை எப்படிப் புரிந்து கொள்வீர்கள் என்று
புரியவில்லை. ஏனென்றால், பெண்களுக்குச் சம உரிமை பேசும் இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் கையில் தான் உள்ளது. எதையுமே காரணமில்லாமல் ஆன்றோர் வகுக்கவில்லை.