அக்கிரமேசி அம்மன் கோயில் விழா
ADDED :1093 days ago
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் கோயில் விழா நடந்தது. இக்கோயிலில் கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் வாலேஸ்வரி அம்மன், ஆண்டாள் திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இதனையொட்டி காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.