வரசித்தி விநாயகர் கோயிலில் மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் தரிசனம்
ADDED :1151 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப் பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் கௌமோதி (I.P.S) (central special home secretary kowmodhi)அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஆசிர்வாத மண்டபத்தில் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் நிர்வாக அதிகாரி ராணா பிரதாப் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.