உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் அன்னாபிஷேக விழா

சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் அன்னாபிஷேக விழா

சாணார்பட்டி சாணார்பட்டி அருகே சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி யாக பூஜை மற்றும் அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிவசக்தி அம்மனுக்கு 16 வகையான திரவிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் பச்சரிசியால் தயார் செய்யப்பட்ட சாதத்தை சிவலிங்கத்தில் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்று. பின்னர் பௌர்ணமி சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது.பின் லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !