உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளபாளையம் ராமநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

பள்ளபாளையம் ராமநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

சூலூர்: பள்ளபாளையத்தில் உள்ள பழமையான ராமநாத ஈஸ்வரர் கோவில் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள பர்வதவர்த்தினி உடனமர் ராமநாத ஈஸ்வரர் கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து, கடந்த, 8 ம்தேதி காலை, 8:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்தன. நேற்று, காலை, 9:30 மணிக்கு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அருளாளர்கள், ஆன்மீக பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !