ராமேஸ்வரத்தில் பக்தர்கள் பயன்பாடின்றி கழிப்பறை கூடம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கழிப்பறை கட்டடம் பக்தர்கள் பயன்பாடின்றி முடுக்கு சந்தில் முடங்கி கிடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராட, தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் அக்னி தீர்த்த கடல், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடிய பின் ரதவீதி வழியாக செல்கின்றனர். அப்போது இயற்கை உபாதை கழிக்க வடக்கு, தெற்கு ரதவீதியில் கழிப்பறை வசதி இன்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் அவலம் உள்ளதால், பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் உள்ளது. மேலும் திறந்த வெளி கழிவுகளால் ரதவீதியில் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் நலன் கருதி தெற்கு ரதவீதியில் மெகா கழிப்பறை கூடம் அமைக்க, ஹிந்து அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடுக்கு சந்து : தெற்கு ரத வீதியில் 6 பேர் பயன்படுத்த கூடிய கோயிலுக்கு சொந்தமான கழிப்பறை கட்டடம், பக்தர்கள் கண்ணுக்கு தெரியாதபடி முடுக்கு சந்துக்குள் மற்றும் வடக்கு ரத வீதியில் ரூ. 80 லட்சத்தில் அமைத்த புதிய கழிப்பறை கட்டடம் இரு ஆண்டுகளாக திறக்காமல் முடங்கி கிடக்கிறது.