காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தி பூஜை
ADDED :1143 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் இன்று சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .விநாயகர் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தியையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சங்கடஹர கணபதி விரத பூஜைகள் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் உட்பட கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி, கோயில் துணை செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.