ஆலங்குடி சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஸ்ரீமத் பாகவத ப்ரவசன மண்டப ஸம்வத்ஸர மஹோத்ஸவம்: வரும் 28ல் துவக்கம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, முடிகொண்டான் கிராமத்தில் ஆலங்குடி சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது.
ஸ்ரீமத்பாகவதத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகான், ஸ்ரீ ஆலங்குடி பெரியவா என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வயம் பிரகாசானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்.
1935 ஆம் வருடம் முடிகொண்டான் கிராமத்தில் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா, பாகவத சப்தாஹம் பண்ணும்போது பிரகலாத சரிதம் சொல்லிக் கொண்டே நரசிம்ம ஸ்வாமியின் திருவடிகளை அடைந்தார். ஒவ்வொரு வருடமும் முடிகொண்டான் கிராமத்தில் சுவாமிகளின் ஆராதனை பாகவத சப்தாஹத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த வருட ஆராதனை, ஸ்ரீமத் பாகவத ப்ரவசன மண்டப ஸம்வத்ஸர மஹோத்ஸவம் வரும் 28.01.2023 ம்தேதி துவங்கி 04.02.2023 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. விழாவில் வார்ஷிக ஆராதனை, அதிஷ்டானத்தில் பாராயண பூர்த்தி, அதிஷ்டான பூஜை, ப்ரவசனம் பூர்த்தி, சுவாமிகளின் திரு உருவ வீதி உலா, மங்கள ஹாரத்தி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை சபா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தொடர்புக்கு: 9715770855