காரைக்கால் கால பைரவருக்கு முத்தங்கி சேவை
ADDED :968 days ago
காரைக்கால் : காரைக்கால் கால பைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெற்றது.
காரைக்கால் நித்திஸ்வரத்தில் உள்ள ஸ்ரீநித்தியக்கல்யாணி சமேத ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று முன்தினம் ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீநித்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து யாகத்தில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் பைரவர் மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.