சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1029 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் துவங்கி காவல் தெய்வங்களுக்கு பூஜைகள், கணபதி, லட்சுமி ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறையினர், ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி, அறங்காவல் குழு உறுப்பினர் அன்பு, ஊராட்சித் தலைவர் ரமேஷ் பொதுமக்கள் பங்கேற்றனர். கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.