உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா துவக்கம்

ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா துவக்கம்

சோமனூர்: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது.

சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த, 21 ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 28 ம்தேதி கம்பம் நடுதல் நடக்கிறது. மார்ச் 6 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைத்தலும், 8 ம்தேதி அதிகாலை அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !