பெத்தாசமுத்திரத்தில் கோவில் தேரோட்டம்
ADDED :4778 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரம் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று காலை செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை தேரோட்டம் நடந்தது.இதில் தோட்டப்பாடி, அலம்பலம், காளசமுத்திரம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.