வாடிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :988 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாதம்பட்டி சடையாண்டி கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பால விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,5ல் சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை கோ பூஜையை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின் சுவாமி பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம கமிட்டி, கிராமமக்கள் செய்திருந்தனர்.