கொரோனாவில் இருந்து உலகை மீட்க குன்றக்குடியில் கந்த சஷ்டி பாராயணம்
ADDED :940 days ago
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவலில் இருந்து உலகத்தை காத்திட கந்த சஷ்டி கவசம் பாராயண வழிபாடு நடந்தது.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தியதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்து மக்கள் மீண்டும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுத்திடவும் உலகை காத்திடவும் நேற்று குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி கவச பாராயணம் நடந்தது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடந்த பாராயணத்தில் குன்றக்குடி மகளிர் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.