கொள்ளிடம் ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
ADDED :946 days ago
பெரம்பலுார் : அரியலுார் அருகே, கொள்ளிடம் ஆற்றில் சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அரியலுார் மாவட்டம், சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இளைஞர்கள் நேற்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காலில் தென்பட்ட கல்லை எடுத்து பார்த்தபோது சுவாமி சிலை என்பது தெரிய வந்தது. மேலும் அருகிலேயே இன்னொரு சாமி சிலை இருப்பது தெரியவந்தது. இவைகள் சுமார் 3 அடி உயரம் கொண்ட தட்சிணாமூர்த்தி, 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து வருவாய்த் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.சிலைகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் அவற்றை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.