உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்; பக்தர்கள் தரிசனம்

மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்; பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

மே 5 அதிகாலை 3:50 மணிக்கு அழகர் பச்சை பட்டுடுத்தி பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அழகரை தரிசித்தனர். தொடர்ந்து, அங்கிருந்து கள்ளழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு சென்றார்.  சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அருள்பாலித்தார். விழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். எழுந்தருளிய கள்ளழகரை திரளான மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !