உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்களவாய் தக்‌ஷண காளி கோவில் மகா கும்பாபிஷேகம்

மேல்களவாய் தக்‌ஷண காளி கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி:  மேல்களவாய் தக்‌ஷண காளி கோவிலில் இன்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தில் செஞ்சி–சேத்துப்பட்டு ரோட்டில் தக்‌ஷண காளி மற்றும் மகா காளி கோவில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோதாரண மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 23ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமமும், மாலை 5 மணிக்கு வாஸ்த்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கலச ஆவாகனம் முதற்கால யாக பூஜையும், இரவு 9 மணிக்கு சிலை பிரதிஷ்டை, அஷ்படந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை காலை 6 மணிக்கு கோ பூஜை, மூல மந்திர பாராயணம், தத்துவார்ச்சனை, விசேஷ திரவிய யாகமும், 9 மணிக்கு நாடி சந்தானமும், 9.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான், விழா குழு தலைவர் பகவான் ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பாபிகஷேக பூஜைகளை ராமச்சந்திர ஐயர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !