கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
ADDED :826 days ago
கூடலுார்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுந்தரவேலருக்கு பால், இளநீர், சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்ட 11 அபிஷேகங்கள் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொங்கல், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.