உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொடை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஓம் சக்தி, பராசக்தி என பக்தர்கள் கோஷமிட சிறப்பாக நடந்தது. நான்கு நாள் நடந்த யாகசாலை பூஜை வேத அனுக்கையுடன் துவங்கின. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், , வாஸ்து சாந்தி, மிருத்சங்கீரஹணம், அங்குரார்பனம், ரக்க்ஷாபந்தனம் நடந்தது. இரண்டாம் யாசாலை சாலை பூஜையில் பூர்ணாகுதி, தீபாதரனை. விக்ரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் யாகசாலை பூஜையும், நான்காம் யாகசாலை பூஜையில் பிரதிஷ்ட ஹோமம் பூர்ணாஹூதி, ஐந்தாம் யாக சாலை பூஜையில் வேதிக்கார்ச்சனை, அஷ்டபந்தனம் சாத்துதல், ஆறாம் கால பூஜையில் நாடி சந்தானம், ஸபர் சா ஹீதி, நேத்ரா உண்மீலம், கடங்கள் விமானம் சென்று ஸ்ரீ மாரியம்மன், கணபதி, சுப்ரமணியர், ஆஞ்சநேயர், நாகாத்தாள் உள்ளிட்ட பரிவார தெய்வ கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !