பண்ணைக்காடு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :900 days ago
பண்ணைக்காடு, பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் அருள்மிகு அரசமரத்தடி ஸ்ரீ புண்ணிய விநாயகர், எம்பெருமாள், சிவசக்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், லிங்கோத்பவர் மற்றும் நவக்கிரக ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று நாள் யாகசாலை பூஜையில் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்ணிய யாகாவசனம், பிரவேச பலி . இரண்டாம் யாக பூஜையில் விசேஷ சந்தியுடன், வேதிகா அர்ச்சனை, மகா பூர்ணாகுதி, மூன்றாம் கால பூஜையில் பஞ்ச சுத்த ஹோமம், நான்காம் கால பூஜையில் பிந்து சுத்தி ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம், கோ பூஜை, கன்னியா பூஜையுடன் ஸ்ரீ அரசமரத்தடி புண்ணிய விநாயகர் மற்றும் பரிவார தெய்வ கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.