இன்று தேய்பிறை அஷ்டமி: கால பைரவரை வழிபட சகல தோஷமும் நீங்கும்!
ADDED :899 days ago
காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். நம்முடைய அச்சத்தை நீக்கி, துன்பங்களில் இருந்து நம்மை காத்தருளும் தெய்வம் தான் பைரவர். கொடிய அபாயங்கள், பகை ஆகியவை நம்மை அணுகாமல் இருக்க பைரவரை வழிபட வேண்டும். சிவப்பு நிற மலர்களால் பைரவரை வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். இன்று காலையில் சிவபெருமானையும், மாலை பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.