சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர் கோயிலில் சனி மகா பிரதோஷம்
காளஹஸ்தி: திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டுப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில், சனி மகா பிரதோஷ கால பூஜை சனிக்கிழமை நேற்று மாலை வெகுச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையில் நந்தீஸ்வரருக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் (பால் தயிர் சந்தனம் மஞ்சள் குங்குமம் பஞ்சாமிர்தம் விபூதி இளநீர்) போன்ற திரவங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னர் நந்தீஸ்வரரை பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பித்தனர் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமை தரிசனம் செய்தனர். பிரதோஷ கால பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரதோஷ பூஜைகளில் பக்தர்களுக்கு எந்த வித சிரமும் இன்றி தரிசனம் நடந்தது.கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏவிஎம் பாலாஜி ரெட்டி முன்னிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.