உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும்.. இத்தனை சிறப்பான மாதமா இது!

ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும்.. இத்தனை சிறப்பான மாதமா இது!

ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும். ஆம். ஆவணி என்பது மங்களகரமான மாதம். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி. இந்த மாதத்தில் எந்த முயற்சியை தொடங்கினாலும் அது வெற்றியில் தான் முடியும். சூரிய நமஸ்காரம், யோகப்பயிற்சிகள், வேதம் பயில்வதற்கு ஏற்றமாதம் ஆவணி. கணங்களின் தலைவரான கணபதி, கீதையை உபதேசித்த பகவான் கிருஷ்ணர் அவதரித்ததும் இந்த மாதமே. இந்த மாதத்தில் தான் மஹாவிஷ்ணுவின் அவதாரமான வாமன மூர்த்திக்கு, மூன்றடி தானம் கொடுத்தார் மகாபலி சக்கரவர்த்தி. ஆவணி ஞாயிறு, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரதநாட்கள் வரும் மாதம் ஆவணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !