உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செந்தூர காப்பு .. விஷ்வ ரூப தரிசனத்தில் அஷ்டாம்ச ஆஞ்சநேயர்; பக்தர்கள் பரவசம்

செந்தூர காப்பு .. விஷ்வ ரூப தரிசனத்தில் அஷ்டாம்ச ஆஞ்சநேயர்; பக்தர்கள் பரவசம்

கோவை; பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார். இங்கு இன்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் செந்தூர காப்பு அலங்காரத்தில் விஷ்வ ரூப தரிசனத்தில் மாருதி அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !