சங்கரருக்கு மரியாதை!
ADDED :5136 days ago
முற்காலத்தில் காஞ்சியில் இருந்த காபாலிகர்கள், அம்பிகைக்கு மிருகங்களை பலியிட்டு பூஜை செய்தனர். இதனால் அம்பாள் உக்கிரமாக விளங்கினாள். ஆதிசங்கரர் காபாலிகர்களை வெளியேற்றி, ஸ்ரீசக்ரத்தை புனருத்தாரணம் (புதுப்பித்து உருவேற் றுதல்) செய்து அம்பிகையை சாந்தப்படுத்தினார். அம்பிகையின் அருளால் சர்வக்ஞ பீடம் (அனைத்தும் அறிந்தவர்) பட்டம் பெற்றார். இவருக்குபிரகாரத் தில் சந்நிதி இருக்கிறது. விழாக்களின் போது ஆதிசங்கரருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.