ஸ்ரீசக்ர மகத்துவம்
ADDED :5136 days ago
* காமாட்சி முன்புள்ள ஸ்ரீசக்ரத்திற்கே முதல் பூஜை நடக்கிறது.
* பிரம்மோற்ஸவம், நவராத்திரி காலங்களில் அம்பாளுக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்ரீசக்ரத்திற்கே அபிஷேகம் செய்யப்படும்.
* பவுர்ணமியன்று இரவு 10.30 மணிக்கு மேல் அம்பாள் சந்நிதியில் திரையிட்டு, ஸ்ரீசக்ரத்திற்கு நவ ஆவரண பூஜை நடக்கும். நள்ளிரவு 12 மணிக்கு மேல் திரையை விலக்கி, சுமங்கலி பூஜை செய்யப்படும். இவ்வேளையில் அம்பாளையும், ஸ்ரீசக்ரத்தையும் தரிசனம் செய்வது விசேஷ பலன் தரும். நவ ஆவரண பூஜையின்போது தீர்த்தப் பிரசாதம் தருகின்றனர்.