உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கப்பனையில் தெரிந்த ஈசனின் நெற்றிக்கண்!; சிவன் திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய விளமலில் பக்தர்கள் பரவசம்

சொக்கப்பனையில் தெரிந்த ஈசனின் நெற்றிக்கண்!; சிவன் திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய விளமலில் பக்தர்கள் பரவசம்

திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால், திருவிளமல், சிவபாத ஸ்தலம் என போற்றப்படுகிறது. இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலம் ஆகும். சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் நேற்று கார்த்திகை தீப விழா சந்திர சேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சொக்கப்பனை ஏற்றிய போது அது சிவனின் நெற்றிக்கண் போல் தெரிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். தீபஜோதியாக தெரிந்த மூலவரை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !