ஊரானுார் வெற்றி விநாயகர், சவுந்தரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :479 days ago
வடமதுரை; வடமதுரை கொம்பேறிபட்டி அருகே ஊரானுாரில் வெற்றி விநாயகர், சவுந்தரராஜப் பெருமாள், காளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சக தேவராஜ் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஊராட்சி தலைவர்கள் ராஜரத்தினம், முனியப்பன், மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரிநீலக்கண்ணன், ஊர் நிர்வாகி அழகர்அம்பலம், ஊராட்சி துணைத் தலைவர் கருப்பையா, வார்டு உறுப்பினர்கள் பெரியசாமி, முருகலட்சுமி, சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.