உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் வருடாபிஷேகம்

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் வருடாபிஷேகம்

திருமங்கலம்; திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று வருடாபிஷேகம் நடந்தது. காலையில் கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் செய்யப்பட்டு மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. ஹோமம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் சங்கரநாராயண பட்டர் மற்றும் குழுவினர் செய்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி அங்கையர் கன்னி, தக்கார் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !