மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு பூஜை
ADDED :437 days ago
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி அருகே கானூர் பெரிய நாயகி அம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி உற்சவமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. கானூர் பெரிய நாயகி அம்மன் கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் மழை வேண்டி முளைப்பாரி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முளைப்பாரி திண்ணையிர் பாரி வளர்த்து தினசரி மழை வேண்டி பெண்கள் கும்மியடித்து பாடல்களை பாடி வழிபட்டு வந்தனர். 16ம் தேதி மாலை பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்து கண்மாயில் கரைத்தனர். இரவு அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. முளைப்பாரி உற்சவத்திலும், திருவிளக்கு பூஜையிலும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.