புதுச்சேரி லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
                              ADDED :34 minutes ago 
                            
                          
                          
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி இரவு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27ம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, நந்தா ஸ்ரீதரன் தரிசனம் செய்தனர்.