தைப்பூச விழா பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :246 days ago
எஸ்.புதுார்: எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் தைப் பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
இங்குள்ள ஞானியார் மடத்தில் பழமையான சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று பால்குடம், பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது.
உலகம்பட்டி நகரத்தார்கள், பொதுமக்கள் பால்குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்தும், காலை 11:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.